Home /News /tamil-nadu /

ரேஷன் கடையில் கை விரல் ரேகை பதிவாகவில்லையா? உடனே இதை சரி செய்தால் போதும்

ரேஷன் கடையில் கை விரல் ரேகை பதிவாகவில்லையா? உடனே இதை சரி செய்தால் போதும்

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவாகவில்லை என பல புகார்கள் வரும் நிலையில் அதற்கு தீர்வு காண சில வழிகள் உள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவாகவில்லை என பல புகார்கள் வரும் நிலையில் அதற்கு தீர்வு காண சில வழிகள் உள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவாகவில்லை என பல புகார்கள் வரும் நிலையில் அதற்கு தீர்வு காண சில வழிகள் உள்ளது.

  • 2 minute read
  • Last Updated :
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தற்போது பயோ மெட்ரிக் முறையில் தான் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் யார் எல்லாம் ஆதார் அட்டை இணைத்து உள்ளார்களோ அவர்கள் மட்டும் தான் பயோ மெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை வைத்து பொருட்கள் வாங்க முடியும். ரேஷன் கடைகளில் பொருள் வாங்கும் போது பலரது கைவிரல் ரேகை பதிவாகவில்லை என  பிரச்னைகள் உள்ளன.

இதற்கு முக்கிய காணரம் அவர்களின் ஆதாரில் பயோ மெட்ரிக் அப்டேட் ஆகாமல் இருக்கலாம். அதனை சரிசெய்ய எளிய வகை உள்ளது. நீங்கள் 10 முதல் 15 வயதில் ஆதார் அட்டை எடுத்து இருந்தால் நீங்கள் பயோ மெட்ரிக் அப்டேட் செய்வது அவசியம். அதேப் போன்று 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஆதார் பயோ மெட்ரிக் அப்டேட் செய்வது அவசியம். வயதனாவர்களுக்கு கைவிரல் ரேகைகளில் தேய்வு மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதால் அவர்கள் பயோ மெட்ரிக்கை அப்டேட் அவசியமாக இருக்கிறது. ஆதார் பயோ மெட்ரிக் என்பது ரேஷன் பொருட்களுக்கு மட்டுமல்ல வங்கி கணக்கு, சிம் கார்டு உள்ளிட்டவற்றுக்கும் முக்கியமானதாகும்.

ஆதார் பயோ மெட்ரிக் முறையை நீங்கள் அப்டேட் செய்ய தாலுகா அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம். இதனை ஆன்லைனில் நீங்கள் அப்டேட் செய்வது முடியாது என்பது குறிப்பிடதக்கது.

இதுதவிர ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாத நிலையில் சிலர் உள்ளனர். அவர்களில் குறிப்பாக வயதானாவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் நேரில் ரேஷன் கடைகளுக்கு செல்லாமல் பொருட்கள் வாங்க முடியும். இதற்கான விண்ணப்பத்தை நீங்கள் சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகள் அல்லது ஆன்லைனில் பெற முடியும். ஆன்லைனில் tnpds.com என்ற இணையத்தில் சென்று இந்த விண்ணப்பத்தை பெற முடியும்.

TNPDS இணையதளத்தில் கீழ்பகுதியில் அங்கீகாரச்சான்று என்ற ஆப்ஷேன் இருக்கும். அந்த விண்ணபத்தில் குடும்ப தலைவரின் பெயர் மற்றும் அட்டை எண், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ரேஷன் கடைக்கு எதனால் நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாது என்ற காரணத்தையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக வயது முதிர்வு, மாற்றுத்திறனாளி, விபத்து, மருத்துவமனையில் சிகிச்சை போன்ற காரணங்களை தெரிவித்து அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

அதேப்போன்று உங்களுக்காக யார் சென்று பொருட்கள் வாங்க உள்ளார்கள், அவர் பெயர், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி உங்கள் ரேஷன் கடைக்கான தாலுகா அலுவலகத்தில் இந்த விண்ணப்பத்தை கொடுத்தால் அவர்கள் அதனை சரிபார்த்து உங்களுக்கு அனுமதி வழங்கி சான்றிதழ் வழங்குவார்கள். இதை வைத்து கொண்டு நீங்கள் ரேஷன் கடைக்கு நேரில் போகமல் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.
First published:

அடுத்த செய்தி