முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Ration Card: ரேஷன் கார்டு விண்ணப்பத்துக்கு ஆர்வம்.. முடங்கி கிடக்கும் இணையதள சேவை

Ration Card: ரேஷன் கார்டு விண்ணப்பத்துக்கு ஆர்வம்.. முடங்கி கிடக்கும் இணையதள சேவை

இணையதளம் முடக்கம்

இணையதளம் முடக்கம்

ஜூலை 1-ம் தேதி முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பொது விநியோக திட்ட இணையதளம் கடந்த சில நாள்களாக முடக்கியிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தனது வாக்குறுதியில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தருவதாக தெரிவித்தது. தேர்தலில் தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியமைத்துள்ளது. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொணடதில் இருந்து தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவெற்றி வருகிறார். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 மானியம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி சமீபத்தில் கூறியிருந்தார்.

Also Read:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி- 11 வழிகாட்டு நெறிமுறைகள் கோயில் நிர்வாகம் வெளியீடு

இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் ரேஷன் அட்டை தொடர்பான அதிகப்படியான விண்ணப்பங்கள் வருவதாக உணவுப்பொருள் விநியோத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள முடியாத சூழல் நிலவியதால் தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இந்நிலையில் ஜூலை 1-ம் தேதி முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிதாக திருமணமானவர்கள், இதுவரை ரேஷன் அட்டை விண்ணப்பிக்காதவர்கள் கடந்த 3 மாதங்களில் இணையதளம் மூலமாக புதிய அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். பலர் குடும்பத் தலைவர் பெயர் உள்ள கார்டுகளை குடும்பத் தலைவி பெயரை மாற்ற ஏராளமான விண்ணப்பங்கள் உணவுப் பொருள் விநியோகத் துறைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read:Vaccine | தமிழகத்தில் எங்கெல்லாம் தடுப்பூசி இன்று போடப்படாது.. விவரம்

தமிழக அரசின் உணவு வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற பொது விநியோக திட்ட இணையதளத்தில் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் அட்டை விண்ணப்பம் தொடர்பான நிலைகளை இதில் அறிந்துக்கொள்ளலாம். பொதுமக்கள் இடையே ரேஷன் அட்டைகள் பெறுவதற்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்தால் பொது விநியோக திட்ட இணையதளம் மிகவும் பிஸியாக இருந்தது. இந்நிலையில் பொது விநியோக திட்ட இணையதளம் கடந்த சில நாள்களாக முடக்கியிருக்கிறது. அதில் எந்தவொரு சேவையையும் பெற முடியாத சூழல் நிலவுகிறது.  தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இணையதள சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: DMK, MKStalin, Ration, Ration card, Ration Goods, Tamilnadu