• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வெங்காய விலை குறைய வாய்ப்பில்லை... எகிப்து, துருக்கி, ஈரானில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு

வெங்காய விலை குறைய வாய்ப்பில்லை... எகிப்து, துருக்கி, ஈரானில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

வெங்காயத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வெங்காய விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

    மக்களின் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாததான வெங்காயத்தின் விலை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. மழைக்காலம் என்பதால் அழுகிப்போவதாலும், பல இடங்களில் உற்பத்தி குறைந்ததாலும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் அதிகபட்சமாக 64 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வரும் நாட்களில் மழை தொடரும் என்பதால் விலை குறைய வாய்ப்பு இல்லை என்றே வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

    இதனிடையே வெங்காய விலை தொடர்பாக அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ வெங்காய விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.

    வெங்காயத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

    சில்லரை விற்பனையாளர்கள் 10 மெட்ரிக் டன்னும், மொத்த விற்பனையாளர்கள் 50 மெட்ரிக் டன்னும் வெங்காயத்தை இருப்பு வைக்க அனுமதி உள்ளது. இதற்கு அதிகமாக இருப்பு வைத்திருந்தால் உணவு பதுக்கல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உணவு வழங்கல் மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனிடையே வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: