உலகத்திலேயே மோசமான நகராட்சி ராசிபுரம்தான்..! - மாவட்ட ஆட்சியர் ஆவேசம்

சுகாதார அதிகாரிகளின் பிரதான வேலையே வெளிமாநிலங்களில் இருந்து வருபவரை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தி 24 மணி நேரத்தில் அவர்களுக்கு காய்ச்சல் சளி உள்ளதா என ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே என்று பேசினார்.

உலகத்திலேயே மோசமான நகராட்சி ராசிபுரம்தான்..! - மாவட்ட ஆட்சியர் ஆவேசம்
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  • Share this:
உலகத்திலேயே மோசமான நகராட்சி ராசிபுரம் நகராட்சிதான் என அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கடுமையாகப் பேசியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை உணராமல் பொதுமக்கள் தொடர்ந்து வெளியே நடமாடி வருவதாகவும், காய்கறிச் சந்தைகளில் அதிக கும்பல் உள்ளதாகவும் மேலும் சமூக இடைவெளியை யாரும் கடைபிடிப்பதில்லை என்ற தொடர் குற்றச்சாட்டை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரிடம் உழவர் சந்தை விவசாயிகள் பலர் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

உழவர் சந்தையை செயல்படவிடாமல் தடுத்து நிறுத்தும் நகராட்சி அதிகாரிகள், வெளியே அதிக சுங்க வசூல் பெற்றுக்கொண்டு வெளியூர் வியாபாரிகள் விற்பதற்கு அனுமதி  அளிக்கின்றனர் என்றும் இதனால் தங்கள் வாழ்வாதாரங்களை நாசமாக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
இது தவிர, உழவர் சந்தை முழுவதும் எப்போது இடிந்து விழும் என்ற சூழ்நிலையில் உள்ளதை கண்டுகொள்வதில்லை என்றும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி என எந்த அடிப்படை தேவைகளும் உழவர் சந்தையில் செய்து தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “அதிகாரிகள் சமூக இடைவெளிவிட்டு அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தி வந்த நிலையிலும், பொதுமக்கள் ஆர்வக்கோளாறு காரணமாக அதிகாரிகளை மதிக்காமல் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது.எனவே ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியை தற்காலிக காய்கறி சந்தையாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கும் பணிகளை ஆய்வு செய்துள்ளேன்” என்றார்.நேற்று முதலமைச்சர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக சமூகத்தில் இருந்து விலகி இருப்பது, வீட்டில் தனிமைபடுத்துதல், சமூக இடை வெளியைப் பின்பற்றுதல் என கடைபிடித்தாலே 100% இந்த நோய்யில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்றார்.

தவிர்க்க முடியாமல் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கிச் சென்று வீட்டுக்குள் நுழைவதற்கு முன் கை கால்களை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவி உள்ளே செல்ல வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும் கைகளால் கண், மூக்கு, வாயைத் தொடுவது மற்றவர்களை தொடுவது போன்ற பழக்கங்கள் அறவே இருக்கவே கூடாது என்றார்.வெளிநாட்டில் இருந்த வந்தவர்கள் 99% பேர் அடையாளம் காணப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் நம் மாவட்டத்தில் லாரி, ரிங், கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ளதால் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த லாரி ஓட்டுனர்கள் நடத்துனர்கள் அதிகம் உள்ளனர். இவர்களை அடையாளம் காணும் பணியை பேரூராட்சியிலும் நகராட்சிகளிளும் உள்ள உள்ளாட்சி துறை ஊழியர்களை வைத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களை கண்காணித்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி செயலாளர்கள், நகராட்சி,பேரூராட்சி என அந்தந்த வார்டில் உள்ள சுகாதார அதிகாரிகளின் பிரதான வேலையே வெளிமாநிலங்களில் இருந்து வருபவரை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தி 24 மணி நேரத்தில் அவர்களுக்கு காய்ச்சல் சளி உள்ளதா என ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே ”  என்று பேசினார்.

பார்க்க  :
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்