திருநெல்வேலியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமின்றி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் மக்கள் சித்த மருத்துவமனையை நோக்கி செல்கின்றனர்.

news18
Updated: November 8, 2018, 10:07 AM IST
திருநெல்வேலியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்
நெல்லை மருத்துவமனை
news18
Updated: November 8, 2018, 10:07 AM IST
நெல்லையில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காய்ச்சலின் தாக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகிரித்துள்ளது. பாளையங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பால், தினமும் 200க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் புறநோளியாக உள்ள நிலையில், 80 பேர் உள்நோயாளியாகவும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

19 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு மருத்துவர்கள் தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தனியார் மருத்துவமனையிலும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்த பாளையங்கோட்டை சித்த மருத்துவமனையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட  ஆயிரக்கணக்கான மக்கள் சித்த மருத்துவமனையை நோக்கி படையெடுக்கின்றனர்.

Also see...

First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்