VIDEO: அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று, இரும்பு கம்பியால் அடிவாங்கிய சாமியார்

திருவண்ணாமலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
திருவண்ணாமலை கோவில் மற்றும் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர்.

அத்தியந்தல் பகுதியில் உள்ள அருணாச்சலேஸ்வரர் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் கடந்த 8 மாதங்களாக தங்கியுள்ளார்.

அதேபோல், நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்தைத் துறந்து காவி வேட்டி கட்டிக் கொண்டு திரிந்து வருகிறார்.


கடந்த ஒரு மாதமாக, அமெரிக்கப் பெண், கிரிவலம் செல்வதை நோட்டமிட்ட மணிகண்டன், அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து கண்காணித்துள்ளார்.

அமெரிக்கப் பெண் வசிக்கும் குடியிருப்பை ஒரு மாதமாக மணிகண்டன் நோட்டமிட்டு, அமெரிக்கப் பெண் தனியாக வசிப்பதை தெரிந்து கொண்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அந்தப் பெண் வீட்டிற்கு சென்று அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கு கிடந்த இரும்புக் கம்பியால் அந்தப் பெண் மணிகண்டனை தாக்கியுள்ளார்.மேலும் அவர் கூச்சலிட்டதில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மணிகண்டனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த கிராமிய போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர் . இந்த சம்பவத்தில் காயம்பட்ட அமெரிக்க பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிகண்டனைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
First published: August 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading