எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில்,
நாமக்கல் மாணவி கீதாஞ்சலில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
தமிழகத்தில் 2021-22ம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பம் கடந்த டிசம்பா் 19ம் தேதி தொடங்கி ஜனவரி 7ம் தேதி வரை நடைபெற்றது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர். இதை தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்றது.
பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கீதாஞ்சலி 710 மதிப்பெண்களுடன் முதல் இடம்பிடித்தார். மாணவர் பிரவீன், பிரசன் ஜித்தன், அர்விந்த் ஆகியோர் அடுத்த மூன்று இடங்களை பிடித்தனர். இவர்கள் அனைவரும் சிபிஎஸ்இ மூலம் கல்வி பயின்றவர்கள்.
இளநிலை பட்டப்படிப்பு 2021-2022 ஆம் ஆண்டுக்கான அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான மொத்த இடங்கள் 7825 (5175 + 2650). அதில் மாநில மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு மொத்த இடங்கள் 6999 (4349 + 2650).
இதையும் படிங்க: பொங்கல் பரிசு வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல்..அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அரசு பல் மருத்துவம் மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான மொத்த இடங்கள் 1960 (200 + 1760). அதில் மாநில அரசு பல் மருத்துவம் மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒதுக்கிடு மொத்த இடங்கள் 1930 (170 + 1760) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27 ம் தேதி சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டு விரர்களுக்கு அன்றைய தினம் கலந்தாய்வு நடைபெறும். ஜனவரி 28, 29ம் ஆகிய தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். பொதுபிரிவினருக்கு ஜனவரி 30ம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும்.
மேலும் படிங்க: நகராட்சி தலைவர் பதவியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கி வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.