ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்.. குழந்தை மரணம் - அரக்கோணத்தில் விபரீதம்

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்.. குழந்தை மரணம் - அரக்கோணத்தில் விபரீதம்

சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்நிலையத்தில் அளித்த புகாரையடுத்து யூடியூப் மூலம் பிரசவம் பார்த்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்நிலையத்தில் அளித்த புகாரையடுத்து யூடியூப் மூலம் பிரசவம் பார்த்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்நிலையத்தில் அளித்த புகாரையடுத்து யூடியூப் மூலம் பிரசவம் பார்த்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

  • 1 minute read
  • Last Updated :

ராணிப்பேட்டை அருகே யூடியூப் வீடியோவை கண்டு அதன் மூலமாக கணவர் பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த நிலையில் குழந்தை பிறந்தது. அதன் தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரக்கோணம் அடுத்த நெடும்புலி கிராமத்தை சேர்ந்த லோகநாதனின் மனைவி கோமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் அங்கு உள்ள புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். இவருக்கு கடந்த 13ம் தேதி குழந்தை பிறக்கலாம் எனவும் அன்றைய தேதியில் மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் பெண்ணின் கணவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.  எனினும் அன்றைய தேதியில் அவருக்கு பிரசவ வலி ஏற்படவில்லை.

Also Read:  பனாமா பேப்பர்ஸ் வழக்கு : விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்

இந்தநிலையில் பெண்ணின் கணவர் லோகநாதன், அவருடைய அக்கா கீதா ஆகியோர் கோமதிக்கு யூடியூப்-பை பார்த்து பிரசவம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் கடந்த 18ம் தேதி கோமதிக்கு, யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம் செய்ததாக கூறப்படுகிறது.  அதில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தாய் கோமதிக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் குழந்தை அசைவற்ற நிலையில் இருந்ததால், குழந்தையை புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு லோகநாதன் கொண்டு சென்றுள்ளார்.

Also Read: விடுதியில் இருந்து போக சொல்கிறார்கள்.. மீண்டும் வேலை கிடைக்குமான்னு தெரியாது? - கண்ணீர் வடிக்கும் ஃபாக்ஸ்கான் ஊழியர்கள்

குழந்தையை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். பரிசோதனை செய்ததில் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளதால் தாய் கோமதி ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் புன்னை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதையடுத்து அப்பெண்ணின் கணவர் லோகநாதனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published: