• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாலாறு, பென்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வாலாஜாபேட்டை அணைக்கட்டில் இருந்து 3,500 கன அடி நீர் வெளியேற்றம்

பாலாறு, பென்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வாலாஜாபேட்டை அணைக்கட்டில் இருந்து 3,500 கன அடி நீர் வெளியேற்றம்

தமிழக மழை

தமிழக மழை

பாலாறு, பென்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்து 500 கன அடி நீரானது வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு வந்து சேர்கிறது அங்கிருந்து 3 ஆயிரத்து 500 கன அடி நீர் ஆனது வெளியேற்றப்பட்டு வருகிறது.

  • Share this:
    தொடர் மழையால்  பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வாலாஜாபேட்டை அணைக்கட்டு பகுதியில் இருந்து 3 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  ஒருசில இடங்களில் சாலை, வீடுகள் ஆகியவற்றில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக  ஆறு, ஏரி , குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.  மழையால்  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னை மற்றும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சுமார் 5 ஆயிரத்து 500 கன அடி நீரானது வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு வந்து சேர்கிறது அங்கிருந்து 3 ஆயிரத்து 500 கன அடி நீர் ஆனது வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக  ராணிப்பேட்டை மாவட்டம் நீர்வளத் துறையின் கீழ் உள்ள 369 ஏரிகளில் 170 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி முழுமையாக நிரம்பியதாக ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரையோரம் வசிக்கும் பொதுமக்கள்  பாதுகாப்பான பகுதியில் இருக்குமாறு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    செய்தியாளர்: சிவா

    இதையும் படிங்க: விடாமல் பெய்யும் மழை.. பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: