லோடு வேனில் ரேஸ்... 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு...!

லோடு வேனில் ரேஸ்... 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு...!
  • News18
  • Last Updated: March 15, 2020, 9:00 AM IST
  • Share this:
ராணிபேட்டை அடுத்த ஆற்காடு அருகே மினி லோடு வேன் சுவரில் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள ஆஜிப்பேட்டை பகுதியை சேர்ந்த 8 இளைஞர்கள் இரவு நேரத்தில் லோடு வேனில் விளையாட்டாக ரேஸ் செல்ல முயன்றுள்ளனர். அதிவேகமாக சென்ற மினி வேன் ஆஜிப்பேட்டை வலைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளனது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு நகர காவல்நிலைய போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த இளைஞர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே துபையல், சையது, அலீம் மற்றும் கலிமுல்லா என்ற 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.


மேலும் விபத்தில் படுகாயமடைந்த 24 வயதான நியால் என்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விளையாட்டாக இளைஞர்கள் செய்த செயலால் ஒரே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading