முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காதலிக்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல் - கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

காதலிக்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல் - கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

கல்லூரி மாணவி

கல்லூரி மாணவி

கல்லூரி மாணவியை தாக்கிய நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

  • Last Updated :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் கழுத்து அறுத்து தப்பியோடிய வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்த  கல்லூரி மாணவி காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில்  மூன்றாம் ஆண்டு "BBA" பட்டம் படித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் மாணவி கல்லூரிக்கு சென்று வரும் பொழுது, அதே கிராமத்தில் உள்ள மாற்று சமூகத்தை சேர்ந்த  நித்திஷ் (வயது 23) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Also Read: ஆசைவார்த்தை கூறி மைனர் பெண்ணுடன் உல்லாசம் - பிஸ்கட் வியாபாரி கைது

இந்நிலையில் கல்லூரி சென்று வரும் பொழுது மாணவியிடம் நட்பாக பழகலாம் என்று பெண்ணிடம் பேசி வந்த நிலையில் தனது காதலை மீண்டும் தெரிவித்துள்ளார். காதலுக்கு மறுத்ததால் ஆத்திரத்தில் பெண்ணை மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து மற்றும் உடல் முழுவதும் கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். பெண்ணை தாக்கிய நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். ரத்தவெள்ளத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பலத்த காயமடைந்த பெண்ணை மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணை கத்தியால் கழுத்து மற்றும் உடல் முழுவதும் கத்தியால் தாக்கி  தப்பியோடிய நபர் குறித்து காவேரிபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பலத்த காயங்களுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியிடம் காவேரிப்பாக்கம் காவல்துறையினர் நீண்டநேரம் விசாரணை மேற்கொண்டதால் பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. மருத்துவமனை  செவிலியர்கள் உடனடியாக வேலூருக்கு அனுப்ப வேண்டுமென்று காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை அறியாமல் காவேரிப்பாக்கம் காவல்துறையினர் மாணவியிடம் ரத்தம் சொட்ட, சொட்ட நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டது பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர்: க.சிவா (ராணிப்பேட்டை)

    First published:

    Tags: Attempt murder case, Crime News, Love failure, Love issue, Police, Ranipettai