மதுபோதையில் தாயுடன் தகராறு - அண்ணனை குத்திக்கொன்ற தம்பி

மாதிரிப்படம்

குடிபோதையில் தாயுடன் தகராறு செய்த சகோதரனை தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  ஆற்காடு அடுத்த காவனூர் அருகே குடிபோதையில் தாயை திட்டி அடித்த அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி  போலீசார் விசாரணை.

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் காந்தியார் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(60) இவரது கணவர் பெருமாள் (68)கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு  ஏழு ஆண் மகன்கள் மற்றும் மகள் ஒருவர் இருக்கிறார். இந்த எட்டு பேரில் மகள் மற்றும் இறுதி மகனுக்கு மட்டுமே திருமணம் ஆகியுள்ளது மற்ற எவருக்கும் திருமணம் நடைபெறவில்லை.
  இந்நிலையில் தாய் லட்சுமியுடன் தேவநாராயணன்(38), கணபதி(22) மற்றும் ஒரு தம்பி தனியாக வசித்து வருகின்றனர்.

  Also Read: பிஞ்சு குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய் துளசி ஆந்திராவில் கைது

  தேவநாராயணன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தன் தாய் சரியாக உணவு வழங்குவதில்லை எனவும் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை எனவும் அசிங்கமாக பேசி சண்டையிடுவது வழக்கம் இந்நிலையில் நேற்று இரவு அதேபோல் தேவநாராயணன்  மதுபோதையில் தன் தாயிடம் சண்டையில் ஈடுபட்டுள்ளார் அப்போது ஆத்திரமடைந்த தம்பி கணபதி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

  இதன்காரனமாக தேவநாராயணன் மற்றும் சகோதரர் கணபதி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வாய்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த  கணபதி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அண்ணன்  தேவ நாராயணனை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த தேவ நாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  Also Read: நாகமாணிக்க கல் சதுரங்க வேட்டை பாணியில் ஒரு சம்பவம் - நம்பி ஏமாற வேண்டாம் எச்சரிக்கும் போலீஸ்

  தேவநாராயணன் இறந்ததை அறிந்த கணபதி வீட்டின் பின்பக்கம் உள்ள மலையடிவாரத்திற்கு சென்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மதுபோதையில் அண்ணன் தம்பிக்கு இடையே நடந்த சண்டையில் அண்ணன் உயிரிழந்தது குறித்து திமிரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த விவகாரம் தொடர்பாக ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பிரபு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.   தப்பி ஓடிய கணபதியை தேடும் பணியில் திமிரி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணனை தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: க.சிவா ( ராணிப்பேட்டை)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: