Home /News /tamil-nadu /

வாலாஜாபேட்டை அணைக்கட்டில் இருந்து 6350 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வாலாஜாபேட்டை அணைக்கட்டில் இருந்து 6350 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அணைக்கட்டு

அணைக்கட்டு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னை மற்றும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தொடர் மழையால்  பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வாலாஜாபேட்டை அணைக்கட்டு பகுதியில் இருந்து 6350 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 

    தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னை மற்றும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது .

    இதன் காரணமாக சுமார் 6350 கன அடி நீரானது வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு வருகிறது. இந்நிலையில் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதாலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் சுமார் 300 ஏரிகள் முழுமையாக நிரம்பியதாலும் பொன்னை மற்றும் பாலாற்றில் இருந்து வரும் 6350 கன அடி நீரானது அப்படியே வெளியேற்றப்படுகிறது என ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதியில் பாதுகாப்பாக இருக்குமாறு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    செய்தியாளர்: கா.சிவா ( ராணிப்பேட்டை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Heavy rain, Ranipettai, Walajabad

    அடுத்த செய்தி