• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ராணிப்பேட்டையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு : 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியேற்றம்

ராணிப்பேட்டையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு : 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியேற்றம்

ராணிப்பேட்டையில்  வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு

ராணிப்பேட்டையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு

பொன்னையாற்றில் 65,000 கன அடிநீரும், பாலாற்றில் 42,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுவதால், 30க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்களை வெளியேற்றும் பணிகளை நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

  • Share this:
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொன்னையாற்றில் 65,000 கன அடிநீரும், பாலாற்றில் 42,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுவதால், 30க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்களை வெளியேற்றும் பணிகளை நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட பாலாறு, மற்றும் பொன்னையாற்றில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வரலாறு காணாத வகையில் பொன்னையாற்றில் 65,000 கன அடி தண்ணீர் நீர்வரத்தும், பாலாற்றில் 42,500 கன நீர் வரத்தும் ஏற்பட்டுள்ளதால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கலவகுண்டா அணை நிரம்பியதை தொடர்ந்து அணையில் இருந்து பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு 65,000 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. இந்த அளவிற்கு நீர்வரத்து கடந்த 1930 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது ஏற்பட்டுள்ளது.

    இதனால் பொன்னையாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ராணிப்பேட்டை - பொன்னை செல்லும் நெடுஞ்சாலையை தொட்டு தண்ணீர் செல்கிறது. சரியாக மேல்விஷாரம் அருகே பொன்னை-பாலாறு சங்கமிப்பதால், பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாலாஜா தடுப்பணைக்கு 42,500 கன அடி நீர் வருவதால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தொடர்ந்து பொன்னை மற்றும் பாலாறு கரையோரங்களில் வசிக்கும் 30 க்கும் அதிகமான கிராம மக்களை, கிராமங்களில் இருந்து வெளியேற்றி முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    Must Read : திரும்ப பெறப்பட்ட சென்னை, திருவள்ளூருக்கான ரெட் அலர்ட்

    நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

    செயய்தியாளர் - க.சிவா, ராணிப்பேட்டை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: