ராணிப்பேட்டையில் ஒரே நாளில் வெவ்வேறு வழக்குகளில் இருவர் போக்சோ சட்டத்தில் கைது!

இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

ஆற்காடு தஞ்சாவூரான் காலனி பகுதியில் பதினேழு வயது சிறுமியை மூன்று மாதங்கள் கர்ப்பமாக்கிய தமிழரசன் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  ராணிப்பேட்டையில் ஒரே நாளில் வெவ்வேறு வழக்குகளில் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  ராணிப்பேட்டை அருகே மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது  குழந்தையின் முகத்தை கைகளால் மூடி தனது வீட்டின் அருகே இருந்த முட்புதருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை காணாததால் குழந்தையின் பெற்றோர் அப்பகுதி முழுவதும் குழந்தையை தேடியுள்ளனர்.

  இது குறித்து அறிந்த முருகன் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையிடம் பெற்றோர் விசாரித்தபோது குழந்தைக்கு முருகன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் முருகனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.

  இதேபோல் ஆற்காடு தஞ்சாவூரான் காலனி பகுதியில் பதினேழு வயது சிறுமியை மூன்று மாதங்கள் கர்ப்பமாக்கிய தமிழரசன் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

  Also read: ஆப் மூலம் கட்டிய பணத்திற்கு நாள்தோறும் அதிக வட்டி.. புதிய வகை நூதன மோசடி!!

  ஒரே நாளில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறை துறையினர் இரண்டு பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருவரையும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர் - சிவா கருணாகரன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: