ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாலாறு-பொன்னையாறு சங்கமிக்கும் மேல்விஷாரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

பாலாறு-பொன்னையாறு சங்கமிக்கும் மேல்விஷாரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு

ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாலாறு-பொன்னையாறு ஒன்றாக சங்கமிக்கும் மேல்விஷாரம் பாலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பின் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகளுக்குப் பின் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேல்விஷாரம் - தெங்கால் பாலாற்று பாலத்தின் அருகே பொன்னையாறும் பாலாரும் ஒன்றாக சங்கமிக்கின்றன.

  ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொன்ணையாறும் பாலாறும் சந்திக்கும் இடத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் நீர் வரத்து குறைய வில்லை. காஞ்சிபுரம் அடுத்த மாகரல் வெங்கசேரி இணைக்கும் செய்யாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் முற்றிலுமாக சேதம் அடைதுள்ளது. வெள்ளம் நீர் குறைந்தாலும் தரை பாலம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதால் காஞ்சிபுரம் உத்திரமேரூர் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

  இதனால் காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் வழியாக மணல்மேடு, ஆர்ப்பாக்கம், சாலவாக்கம், களியம்பூண்டி, கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

  பாலாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக 10ஆவது நாளாக வாலாஜாபாத்-இளையனார்வேலூர் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வாலாஜாபாத் இருந்து இந்த சாலை வழியாக செல்லும் அவலூர், தம்மனூர், இளையனார்வேலூர், சாலவாக்கம், திருப்புலிவனம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சாலை துண்டிக்கப்பட்டு 20 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

  பாலாற்றின் இரு கரையும் தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரமேரூர் தாலுக்கா மற்றும் காஞ்சிபுரம் தாலுகாவிற்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  Must Read : திருப்பதியில் ஆபத்தான நிலையில் 500 ஆண்டு பழமையான ஏரி- 20 கிராம மக்கள் முகாமுக்கு மாற்றம்

  மேலும் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் உள்ள பள்ளிகள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர் - க.சிவா, ராணிப்பேட்டை

  Published by:Suresh V
  First published:

  Tags: Palar River