லஞ்சம் கொடுத்தால்தான் கொள்முதல்: 45 நாட்களாக தேங்கியிருக்கு நெல் மூட்டைகள்

நெல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் 13 ஆயிரம் நெல் முட்டைகள்  கடந்த 45 நாட்களாக தேங்கியுள்ளன

 • Last Updated :
 • Share this:
  ராணிப்பேட்டை மாவட்டத்தில், நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் 13 ஆயிரம் நெல் மூட்டைகள்  கடந்த 45 நாட்களாக தேங்கியுள்ளன.

  ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 80 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயப்பட்டு வருகின்றன.  இந்த அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்  கொள்முதல் செய்யப்பட்டு,விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியம் தச்சம்பட்டறை கிராமத்தில் கடந்த ஆண்டு  அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் என்பவர் முறையான அனுமதி பெற்று  நடத்தி வருகிறார்.

  மேலும் படிக்க... வாக்குச்சாவடி  முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை

  இந்நிலையில்,   அறுவடையான நெல்லை கொள்முதல் செய்யக் கோரி  வேலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக  மண்டல மேலாளர் நாகாரஜன் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மோகன் ஆகியோரை  வெங்காடாசலம் அணுகியுள்ளார். அப்போது  அறுவடையான  நெல்லுக்கு கொள்முதல் உரிமம் வழங்க ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

  பணம் தராததால்  நெல்லை கொள்முதல் செய்ய அவருக்கு காலதமாதமாக அனுமதி வழங்கியுள்ளனர். இதைடுத்து விவசாயி வெங்கடாசலம் அப்பகுதி விவசாயிகளிடம் சுமார் 13 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை கொள்முதல்  செய்துள்ளார்.

   

  எனினும்,   அதிகாரிகள்  கேட்ட ரூ.2  லட்சம் லஞ்சம் கொடுக்காததால் விவசாயிகளிடம் இருந்து பெற்ற நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் வராமல் தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால்,  சுமார் 13 ஆயிரம்  நெல்  மூட்டைகள் பில் போடப்படாமல்  தேங்கியுள்ளன இதனால் கடும் நஷ்டத்தை சந்திக்கும் சூழலுக்கு  விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

  மேலும் மண்டல மேலாளர் நாகராஜான் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மோகன் ஆகியோர் ஏஜெண்ட்டுக்களை வைத்து வெளி மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகளை  கொண்டுவந்து நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில்   அதிகவிலைக்கு கொள்முதல் செய்து முறைகேடான வகையில்  பணம் ஈட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

  மாவட்டம் முழுவதும் உள்ள 80 க்கும் மேற்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வாரந்தோறும் லட்சங்களில் அதிகாரிகள் லஞ்சமாக பெற்று வருவதாக விவசாயிகள்  குற்றஞ்சாட்டுகின்றனர்.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், வருமான வரித்துறையினர், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

   
  Published by:Murugesh M
  First published: