Home /News /tamil-nadu /

தீரன் படபாணியில் ராணிப்பேட்டையில் நடந்த கொள்ளை - இளைஞர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை

தீரன் படபாணியில் ராணிப்பேட்டையில் நடந்த கொள்ளை - இளைஞர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை

ராணிப்பேட்டை கொள்ளை சம்பவம்

ராணிப்பேட்டை கொள்ளை சம்பவம்

சந்தேகத்திற்கு இடமாக பிடிபட்ட இளைஞர்களிடம் இருந்து நாட்டு வகை துப்பாக்கி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    தீரன் பட பாணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையதாக 2 இளைஞர்களை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த செய்யூர், கன்னிகாபுரத்தை சேர்ந்த ஆடிட்டர் புஷ்கரன் உள்ளிட்ட 4 பேரை கடந்த 17 ம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் 25 சவரன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறை விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.

    முதலில் வடமாநில இளைஞர்களுக்கு இந்த கொள்ளையில் தொடர்பு ஏதேனும் இருக்கலாம் என்ற நோக்கத்தில் முதற்கட்ட விசாரணை தொடங்கிய காவல்துறை பின்னர் இந்த கொள்ளை சம்பவத்தில்  உள்ளூர் கொள்ளையர்கள் தான் ஈடுபட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக துப்பு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் காவல்துறை திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட அருகாமையில் உள்ள மாவட்டங்களில்  நடந்த கொள்ளை சம்பவம் குறித்தும் அதில் சிக்கிய கொள்ளையர்களை தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

    Also Read:  ராஜேந்திர பாலாஜியை நெருங்கியது போலீஸ்.. ரகசியமாக உதவிய இருவர் கைது

    இதில் கடந்த அக்டோபர் 15 ம் தேதி அரக்கோணம் அடுத்த பாலவாய் என்ற கிராமத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஆனந்த கிருபாகரன் என்பவரது வீட்டில் கொள்ளை அடிக்க வந்த கும்பல் வீட்டில் பணம், நகை எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பழைய காட்சிப்பொருளாக வைத்திருந்த நாட்டு வகை துப்பாக்கி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இந்த வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வியாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வழக்கை பெரிதுபடுத்தாமல் இளைஞனை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    Also Read:  உல்லாசமாக இருக்க தாய்மாமன் வீட்டில் கைவைத்த இளைஞன் - காஞ்சிபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

    இந்த இரண்டு கொள்ளைகளில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வியாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (வயது22) மற்றும் சின்னராசு (வயது21) ஆகிய இரண்டு இளைஞர்களை தற்போது பிடித்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கு இடமாக பிடிபட்ட இளைஞர்களிடம் இருந்து நாட்டு வகை துப்பாக்கி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    செய்தியாளர்: சிவ கருணாகரன் (ராணிப்பேட்டை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Gold Robbery, Gold Theft

    அடுத்த செய்தி