நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி: மாற்றுத்திறனாளி இளைஞருக்கு செயற்கைக் கால் கிடைத்தது!

அஜித்குமார்

அரசு சார்பில் வழங்கப்பட்ட செயற்கை கால் தரம் இல்லாமல் இருந்ததால் அதனை பயன்படுத்தி நடக்க முடியாமல் அஜித்குமார் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து நியூஸ் 18 தமிழில் செய்தி வெளியிடப்பட்டது.

  • Share this:
    ராமநாதபுரத்தில் அவதிப்பட்டு வந்த மாற்றுத் திறனாளிக்கு நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியாக செயற்கைக் கால்  கிடைத்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உலகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்.  கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த விபத்தில் தனது ஒரு காலை அஜித்குமார் இழந்தார். இந்நிலையில் ஒரு கால் இழந்த அஜீத் குமாரை அவரது முறைப்பெண்ணாண பவ்யா காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  தற்போது 2 வயதில் ஒரு ஆண் குழந்தைய உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த 2012-ம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகளாக அக்கம்பக்கத்தில் கடன் பெற்று செயற்கையான மரக்காலை அஜித்குமார் பொருத்தியுள்ளார். இந்த மரக்கால் தற்போது முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே பல நாட்களாக  முடங்கி கிடக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

    இதையும் படிங்க: நள்ளிரவில் ஜன்னலில் எட்டிப்பார்க்கும் கொள்ளையர்கள்.. அதிரவைத்த சிசிடிவி காட்சிகள் - இருவர் கைது!

    மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின் மூலம் கடந்த சில தினங்களுக்கு   முன்பு  அஜித்குமாருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது. இதனை   பயன்படுத்தி நடந்து செல்லும்போது காலில் முறிவு ஏற்பட்டு அவர் கீழே தவறி விழுந்தார். பின்னர்தான், அஜித்குமார் தரமற்ற செயற்கை கால் வழங்கப்பட்டது தெரியவந்தது.

    மேலும் படிக்க: திருமணமான ஒரே மாதத்தில் தோழியுடன் மாயமான கல்லூரி மாணவி- சென்னையில் மீட்பு...


    தரமற்ற செயற்கை காலை பயன்படுத்த முடியாமல் அஜித் குமார் சிரமப்பட்டு வந்தார்.  இதனை மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  நியூஸ்18 தமிழ்நாடு செய்தி வாயிலாக செய்தி வெளியிட்டிருந்தோம். அதனடிப்படையில்  தற்போது  மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அஜித் குமாருக்கு உடனடியாக தரமான புதிய  செயற்கை காலை  வழங்கினார்.  இதனால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த அஜித்குமார்.  அஜித்குமார் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தனது  நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

    செய்தியாளர்: தமிழ்செல்வன் -பரமக்குடி
    Published by:Murugesh M
    First published: