ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை - உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை - உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

உடற்கல்வி ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது

உடற்கல்வி ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது

Ranipettai : ராணிப்பேட்டையில், சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் பள்ளி காப்பகத்தின் உடற்கல்வி ஆசிரியர் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ராணிப்பேட்டை அருகே பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்டம்  நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும், அரசு சமூக நல பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்படும் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் பள்ளி இல்லம் உள்ளது. இங்கே சிறுவர்கள் முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்கிப் படித்து வருகின்றனர். இதில், பல்வேறுதுறை சார்ந்த ஆண் பெண் என இருபாலரும் கொண்ட ஆசிரியர்கள் இந்த பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். அதிகப்படியான மாணவர்கள் விடுதியில்  தங்கி பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்( வயது 46) என்பவர்  உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பள்ளியில் சேர்ந்துள்ளார். இவர் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 14 ஆண்டுகளாக, இந்தப் பள்ளியில் உள்ள 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுடன் இவர் கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் சில மாணவர்கள் மிகுந்த மன அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து புகார்கள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள், பள்ளி காப்பாளர் விஜயகுமாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருதி காப்பாளர் விஜயகுமார் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

Must Read : நடுவானில் இளம்பெண் அட்டகாசம்.. பணிப்பெண்களுடன் சண்டை சக பயணிக்கு பளார்.. பாதிவழியில் தரை இறக்கப்பட்ட விமானம்

இந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காப்பகத்தில் உள்ள மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் - க.சிவா, ராணிப்பேட்டை

First published:

Tags: Arrested, Homosex, POCSO case, Ranipettai, Teacher