Home /News /tamil-nadu /

40 ஆண்டுகளாக மரத்தடியில் வாழும் நரிக்குறவர் சமூகத்தினர் : வீடு கட்டித்தர கோரிக்கை

40 ஆண்டுகளாக மரத்தடியில் வாழும் நரிக்குறவர் சமூகத்தினர் : வீடு கட்டித்தர கோரிக்கை

நரிக்குறவர் சமூகத்தினர்

நரிக்குறவர் சமூகத்தினர்

குடியிருக்க அரசுக்கு சொந்தமான இடத்தில் தொகுப்பு வீடு கட்டித் தரவேண்டும் என நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட ரத்தினகிரி முருகன் கோவில் அடிவாரத்தில் 40 ஆண்டுகளாக மரத்தடியில் வசித்துவரும் நரிக்குறவ சமூகத்திற்கு நிரந்தர மற்றும் வீடு கட்டித்தர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

    நரிக்குறவர் இன சமூகத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரத்தினகிரி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் ஓரங்களிலும் காவல் நிலையம் எதிரிலும் ஆங்காங்கே மரத்தடி நிழலில் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு அரசு தரப்பில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுரிமை உள்ளிட்ட அரசு தரப்பில் வழங்கப்படும் நல திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் தங்களுக்கு போதாது என்றும் தாங்கள் குடியிருக்க ரத்தினகிரி அருகாமையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு இடம் ஒதுக்கி தொகுப்பு வீடு கட்டித் தரவேண்டும் என சமூகத்தைச் சார்ந்தவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த காலத்திலிருந்து பல முறை வீட்டுமனைப்பட்டா குடியிருப்பு கேட்டு அலுத்து விட்டதாகவும் தங்கள் குழந்தைகள், மழைக் காலத்திலும் வெயில் காலத்திலும் கொசுக்களும் பல வேதனைகளை உள்ளாகி வசித்து வருவதாகவும் தங்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் முன்வந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று கூறுகின்றர்.

    Must Read : விவசாயிகளுக்கு நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    மலையடிவாரத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் தாங்கள் செய்யும் ஊசிமணி தொழிலை வைத்து பிழைப்பு நடத்தும் தங்களுக்கு அரசு தரப்பில் மானத்துடன் கடன் வழங்க வேண்டும் எனவும், மேலும் தங்களுடைய குழந்தைகள் படிப்பதற்கான அனைத்து வசதிகளும் அரசு முன்வந்து செய்து தர முன்வர வேண்டும் என கோரிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    செய்தியாளர் - க.சிவா, ராணிப்பேட்டை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ranipettai

    அடுத்த செய்தி