Home /News /tamil-nadu /

ஊரக வேலை வாய்ப்பின் மூலம் வேலை வழங்கப்படாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

ஊரக வேலை வாய்ப்பின் மூலம் வேலை வழங்கப்படாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பின் மூலம் பணியாற்றி வந்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பின் மூலம் வேலை வழங்கப்படாததை கண்டித்து 100கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பின் மூலம் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி மூன்று மாத காலம் வேலை வழங்கப்படாது என பணித்தள பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த கிராம பெண்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இதற்கான பதில் எதுவும் வராத நிலையில், நெமிலி, காவேரிப்பாக்கம் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சாலைமறியல் போராட்டத்தின் போது பணியாளர்கள் தெரிவிக்கையில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் தொடர்ந்து பணியினை வழங்க வேண்டும் எனவும், பல்வேறு முறைகேடு செயல்களில் ஈடுபட்டு வரும் இரண்டு பணித்தள பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு புதிய பணித்தள பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

    Also read... பல்லாவரத்தில் தொழிலாளி மீது தாக்குதல் - விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உட்பட 9 பேர் கைது

    சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி காவல்துறையினர் மற்றும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வேலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    செய்தியாளர் - க.சிவா.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Ranipettai

    அடுத்த செய்தி