முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காதலுக்கு எதிர்ப்பு தூக்கில் தொங்கிய ப்ளஸ் டூ மாணவி.. காதலனும் தற்கொலை

காதலுக்கு எதிர்ப்பு தூக்கில் தொங்கிய ப்ளஸ் டூ மாணவி.. காதலனும் தற்கொலை

காதல் ஜோடி தற்கொலை

காதல் ஜோடி தற்கொலை

ராணிப்பேட்டையில் காதல் ஜோடி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராணிப்பேட்டையில் காதலை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த ப்ளஸ்  2மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலி இறந்த செய்தியைக் கேட்டு காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது 18 வயது மகள்  அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கதிர்வேல் (வயது 24) என்ற இளைஞர் கேட்டரிங் படித்து விட்டு வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் தன் காதலியின் பெற்றோர்களிடம் பேசியுள்ளார். ஆனால் இதற்கு அந்தப்பெண்ணின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததோடு அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி செய்வதறியாது தவித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  தன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலி இறந்த செய்தியை கேட்ட  காதலனான கதிர்வேல் மன வேதனையில் நீலகண்டராயபுரம் என்ற கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Also Read:  திருச்சியில் லாரி உரிமையாளர் கொலை.. தாயே கூலிப்படையை ஏவியது அம்பலம்

இந்தநிலையில் இருவீட்டாரின் குடும்பத்தினரும் போலீசாருக்கு தெரியாமல் சடலங்களை புதைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால் இந்த சம்பவம் குறித்து ரகசிய தகவல் கிடைத்த ராணிப்பேட்டை போலீசார் காதல் ஜோடியான இருவரின் சடலங்களையும் கைப்பற்றி வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்த வீட்டில் வசித்துவந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டு மரணத்தில் ஒன்று சேர்ந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்தியாளர் : க.சிவா (ராணிப்பேட்டை)

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Commit suicide, Crime News, Death, Lovers