ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் வெறிச்செயல்.. மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் வெறிச்செயல்.. மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை

கள்ளக்காதல்  விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே காணாமல் போனதாக தேடிவந்த பெண் முகம் சிதைக்கப்பட்டு விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்ன குக்குந்தையைச் சேர்ந்த கூலித்தொழில் ஜெய்சங்கர் ( வயது 40) அவரது மனைவி மகேஸ்வரி( வயது 35)  இவர் சித்தாள் வேலை செய்து வந்தார்.  இந்த தம்பதியினருக்கு 2  குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரி சிலருடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த வாரம் மகேஸ்வரி அவரது தாய்வீட்டிற்கு செல்வதாக கூறிசென்றவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை . எனவே மனைவி மாயமானது குறித்து ஜெய்சங்கர் கடந்த 31-ந் தேதியன்று ஆற்காடு கிராமியக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  மகேஸ்வரியை போலீஸார் தேடிவந்தனர்.

  Also Read: நடத்தையில் சந்தேகம்.. காதல் மனைவி குத்திக் கொலை.. கோவை ஆட்டோ ஓட்டுநரின் வெறிச்செயல்

  இந்நிலையில்  அதே குக்குந்தியில் உள்ள விவசாயக் கிணற்றில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மிதப்பதாக ஆற்காடு கிராமியப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

  தகவலின் பேரில் அங்குச் சென்ற போலீஸார் கிணற்றில்  மிதந்நு கிடப்பது காணாமல் போன மகேஸ்வரியின் சடலம் என்பதை உறுதிசெய்தனர்.இதனையடுத்து வழக்குப்பதிவு செய்தப்போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அடுக்குப்பாறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பிவைத்தனர்.

  இதற்கிடையே தகவலறிந்த மகேஸ்வரின் கணவர் ஜெய்சங்கர் மற்றும் அவரது உறுப்பினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மகேஸ்வரியுடன் நெருக்கமான தொடர்பு இருந்தவர்கள் அவரைக் கொன்று கிணற்றில் போட்டுள்ளதாகவும் உடனே அவர்களை கைது செய்யவேண்டுமென காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆற்காடு -செய்யாறு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

  இதனையடுத்து குக்குந்தியைச் சேர்ந்த இருவரைப் போலீஸார் பிடித்து பெண்ணுடன் இருந்த தொடர்பு ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ஆற்காடு கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  Also Read: One sided love | ஒருதலைக் காதலால் விபரீதம்.. கண்டித்த அண்ணனுக்கு கத்திக்குத்து - தூத்துக்குடியில் பயங்கரம்

  மகேஸ்வரியின் கள்ளக்காதலன் குக்குந்தி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான பிரபு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பிரபுவுக்கும் மகேஸ்வரியும் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளனர். இந்த நிலையில் பிரபுவுக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிய நிலையில் இவர்கள் வழக்கமாக சந்திக்கும் கிணற்றருகே மகேஸ்வரி காத்துக் கொண்டு உள்ளார்.

  அங்கு வந்த பிரபு மற்றவருடன் ஏன் தொடர்பில் இருக்கிறாய் எனக் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். ஒருவரை ஒருவர் கடுமையான சொற்களால் சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பிரபு கல்லால் தலையில் தாக்கி மகேஸ்வரி கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படுகிறது.   கள்ளக்காதல்  விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஆற்காடு கிராமிய போலீசார் பிரபுவை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: க.சிவா (ராணிப்பேட்டை)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Attempt murder case, Crime News, Death, Illegal affair, Illegal relationship, Ranipettai