• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நடிகர் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் போலி ஐ.டி.ரெய்டு.. 5 பேர் கைது..

நடிகர் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் போலி ஐ.டி.ரெய்டு.. 5 பேர் கைது..

actor surya

actor surya

தொழிலதிபரின் வீட்டில் போலியாக ரெய்டு நடத்திய மர்ம கும்பல் 6 லட்சம் ரூபாயை சுருட்டிச் சென்றது.

  • Share this:
    நடிகர் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் போலி ஐ.டி.ரெய்டு நடத்தி 6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 5 பேர் கைது.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆட்டோ கண்ணன் என்பவர் வீட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி  சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் போலியாக ரெய்டு நடத்திய மர்ம கும்பல் 6 லட்சம் ரூபாயை சுருட்டிச் சென்றது. இது தொடர்பாக தொழிலதிபர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த வழக்கில் சென்னை மற்றும் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
    இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியன் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியே வந்துள்ளனர்.

    நாள்தோறும் ஆற்காடு காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு செல்லும் அவர்களை, அதே வழக்கில் தொடர்புடைய 5 பேர் சந்திக்க வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆற்காடு SSS கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பிரபு மற்றும் உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Also read: காதலிப்பதாக பெண் குரலில் ஏமாற்றி ஒரின சேர்க்கை வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கொலை!

    அந்த நேரத்தில் பிணையில் வந்த 6 பேரை சந்திக்க வந்த சென்னை ஆதம்பாக்கம் நரேந்திரநாத் (42), ஆதம்பாக்கம் ராஜேஷ் (33), செம்மஞ்சேரி பரமகுரு (42), ஆதம்பாக்கம் கார் ஓட்டுநர் ஐயப்பன் (25), மாம்பாக்கம் சீனிவாசன் (34)  ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் அனைவரும் ஆட்டோ கண்ணன் வீட்டில் பணம் பறித்த சம்பவத்தில் உடன் இருந்தவர்கள் என்றும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வரும் புகார்கள் குறித்த நபர்களின் விவரங்களை ராமகிருஷ்ண யாதவ், சேகரித்து நரேந்திர நாத்திடம் வழங்குவதோடு, அந்த இடத்துக்கு ஆட்களுடன் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடித்து பணத்தை பறித்துச் செல்வது விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    க.சிவா - செய்தியாளர் , ராணிப்பேட்டை 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: