இரிடியம் இருப்பதாக கூறி அலுமினிய குண்டானை காட்டி ஏமாற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த ஜாபிர் என்பவர் தாம்பரத்தில் பணி செய்து கொண்டிருந்த போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் என்பவருடன் தொடர்பு ஏற்படுகிறது. ராஜன் என்பவர் மூலம் இந்த தொடர்பு ஏற்பட்ட நிலையில் உலகநாதன் தன்னிடம் இரிடியம் இருப்பதாக கூறியுள்ளார். இதை விற்றால் பல லட்ச ரூபாய் பணம் கிடைக்கும் என தெரிவித்து ஒன்றரை லட்ச ரூபாய் பணம் முன்பணமாக பெற்று மீதம் 3 லட்ச ரூபாய் இருடியம் கொடுக்கும்போது கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக உலகநாதன் நெய்வேலியில் உள்ள பாலசுப்பிரமணியம் என்பவரது வீட்டிற்கு ஜாகிரை அழைத்து வந்து அங்குள்ள ஒரு பொருளை காட்டி இதான் இருடியம் என தெரிவித்துள்ளார். பணத்தை கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மீண்டும் ஜாகிரை அழைத்து நெய்வேலியில் உள்ள பாலசுப்பிரமணியம் வீட்டில் பாத்திரம் போல் உள்ள ஒரு பொருளை தொட்டுப்பார்க்க சொல்லியுள்ளார்கள் அதனை தொட்ட போது அது ஷாக் அடித்து உள்ளது.
இது பவர்ஃபுல் இருடியம் இதனை உடனடியாக பணத்தை கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளார் உலகநாதன். ஆனால் ஜாகிர் தான் பணம் எடுத்து வரவில்லை எனவும் வங்கி கணக்கில் பணம் உள்ளதாகவும் அதனை எடுத்து வருவதாக கூறியுள்ளார் பணம் எடுக்காமல் இருடியத்தை தொட்டாய் எனக்கூறி பாலசுப்பிரமணியம் உலகநாதன் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து ஜாகீர் கடலூர் மாவட்டம் முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
போலீசார் உடனடியாக நெய்வேலி சென்று அங்கு இருந்த உலகநாதன் மற்றும் பாலசுப்ரமணியன் பிடித்துள்ளனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த அந்த பாத்திரத்தை சோதனை செய்தபோது அலுமினிய பாத்திரத்தின் மேல் அலுமினிய ஃபாயில் பேப்பர் சுற்றி அதனுள் பேட்டரி வைத்து அதில் மின்சாரம் பாய்ச்சி உள்ளனர். அதனை தொட்டால் ஷாக் அடிக்கும் விதமாக செய்துள்ள நிலையில் இதனை பார்த்து தான் ஜாகீர் ஏமாந்து உள்ளார் என தெரியவந்த நிலையில் அவர்கள் இருவரையும் முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
மேலும் இதில் மற்றொரு குற்றவாளியான ராஜன் சென்னை தாம்பரத்தில் கைது செய்யப்பட்டு அவரும் முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறார். இரிடியம் இருப்பதாக கூறி தொடர்ந்து மோசடி நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.