Home /News /tamil-nadu /

Beast Release : பீஸ்ட் ரிலீஸ் - ஒளிர்ந்த திரையரங்க வளாகம்... DJ நிகழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாக நடனம்

Beast Release : பீஸ்ட் ரிலீஸ் - ஒளிர்ந்த திரையரங்க வளாகம்... DJ நிகழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாக நடனம்

பீஸ்ட் ரிலீஸ்

பீஸ்ட் ரிலீஸ்

Beast Release : பீஸ்ட் திரைப்படம் வெளியீட்டை ஒட்டி ராணிப்பேட்டையில் அதிகாலை முதல் திரையரங்கு வளாகத்தில் வண்ண விளக்குகள் ஒளிர DJ நிகழ்ச்சியில் ரசிகர்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தையொட்டி அதிகாலை முதலே திரையரங்குகள் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த DJ  நடன நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலர் நடனமாடி உற்சாகமடைந்தனர்.

    தமிழகம் முழுவதும் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் இன்று அதிகாலை 4 மணிக்கு பீஸ்ட் திரைப்பட  ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டது. இதனால், அதிகாலை முதலே பீஸ்ட் திரைப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்தனர். அந்த வகையில் ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கில் பீஸ்ட் படம் வெளியீட்டை தொடர்ந்து DJ நிகழ்ச்சியினை ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர்.

    ரசிகர்கள் உற்சாக நடனம்


    Must Read : தந்தைக்கு அடுத்து மகளுடன்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் இசைஞானி இளையராஜா!

    இதில் திரையரங்க வளாகத்திற்குள் வண்ண வண்ண விளக்குகளுக்கு மத்தியில் விதவிதமான விஜய் பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர். மேலும் பட்டாசுகள் வெடித்தும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர், க.சிவா, ராணிப்பேட்டை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Actor Vijay, Beast, Ranipettai

    அடுத்த செய்தி