ராணிப்பேட்டையில் அரசு மருத்துவமனையில் விபத்து: ஒரு கண் பார்வையை இழந்த தற்காலிக செவிலியர்; பணி நிரந்தரம் செய்ய ஆட்சியர் பரிந்துரை!

கண்பார்வை இழந்த செவிலியர் - ராணிப்பேட்டை ஆட்சியர்

ஆக்ஸிஜன் ஃபுளோ மீட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென ஆக்ஸிஜன் பீறிட்டு வெளியேறியது. இதில் செவிலியர் இந்துவின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. 

 • Share this:
  ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் விபத்தில் ஒரு கண்பார்வையை இழந்த தற்காலிக செவிலியரை பணி நிரந்தரம் செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

  ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக பணியாற்றி வருபவர் இந்து (30 ). இவர் கடந்த மாதம் 23ம் தேதி வழக்கம்போல், பணியில் இருந்த போது, மருத்துவரின் உத்தரவின் பேரில் அங்கு பிறந்த குழந்தைக்கு ஆக்ஸிஜனை செலுத்த முயற்சித்தார்.

  அப்போது ஆக்ஸிஜன் ஃபுளோ மீட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென ஆக்ஸிஜன் பீறிட்டு வெளியேறியது. இதில் செவிலியர் இந்துவின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.  உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் செவிலியர் இந்து தனது இடது கண்பார்வையை இழந்தார்.

  Also read: தமிழகத்தில் வெகுவாக குறையும் கொரோனா தொற்று, குறையாத உயிரிழப்பு... இன்றைய பாதிப்பு நிலவரம்

  இந்த விபத்து குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், செவிலியர் இந்துவின் ஏழ்மை நிலையையும், அவரது சேவையையும் கருத்தில் கொண்டு அவரின் சிகிச்சைக்கான தொகை ரூ.45,616 ஐ சிஎஸ்ஆர் சிறப்பு நிதி தொகுப்பிலிருந்து வழங்கினார்.

  மேலும் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வரும் இந்துவை பணி நிரந்தரம் செய்யவும் பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் - க.சிவா

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: