கோயம்புத்தூர் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் குளிர்சாதனப் பெட்டி கழிவறை சுத்தம் இல்லாததால் நான்கு மணி நேரம் உடல் உபாதை கழிக்க செல்ல முடியாமல் தவித்ததாக கூறி அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயில் சில மணி நொடிகளில் அபாயச் சங்கிலியை இழுத்த ரயில் பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய இன்டர்சிட்டி அதி விரைவு ரயில் காலை 6.15 மணி அளவில் கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதனப்பெட்டியில் பிரசாந்த் என்ற ரயில் பயணி பயணித்துள்ளார். குளிர்சாதனப் பெட்டியில் கழிவறை சுத்தம் இல்லை என சேலம், ஈரோடு, உள்ளிட்ட ரயில் நிலைய ரயில்வே துறைக்கு புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மதியம் 12 .22 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையம் வந்த இன்டர்சிட்டி விரைவு ரயில் புறப்பட்ட சில வினாடிகளிலேயே அபாயச் சங்கிலி ஒலித்ததால் ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே ஊழியர்கள், ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதனப் பெட்டியில் இருந்து அபாய சங்கு ஒலித்தது தெரியவந்தது. உடனடியாக அவரை விசாரணை செய்த அதிகாரிகள் நான்குமணி நேரமாக சிறுநீர் கழிக்க முடியாமல் பெட்டியில் உள்ள அனைவரும் தவித்து வருவதாகவும் இதுகுறித்து பலமுறை ரயில்வே துறைக்கு புகார் கொடுத்தும் எந்த ரயில் நிலையத்திலும் இதற்கான தீர்வு கிடைக்கவில்லை.
Must Read : வீட்டில் தனியாக இருந்த ப்ளஸ் 1 மாணவி கழுத்தறுத்து கொலை.. உடுமலையில் அதிர்ச்சி சம்பவம்
எனவே, இது போன்ற செயலில் ஈடுபடுவதாகவும் ரயில் பயணி ஆவேசமாக ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
செய்தியாளர் - க.சிவா, ராணிப்பேட்டை. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.