• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒருமணி நேரத்தில் 47 பேரை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்

ஒருமணி நேரத்தில் 47 பேரை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்

வெறிநாய்

வெறிநாய்

வெறிநாய் கடித்த 12 பேர் உள்நோயாளிகளாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Share this:
    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஒரு மணி நேரத்தில் சுமார் 47  பேரை வெறிநாய் கடித்ததில், பலத்த காயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி, சோளிங்கர் வட்டாட்சியர் நேரில் சென்று ஆறுதல் கூறி பழம் பிஸ்கட்களை வழங்கினர். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    சோளிங்கர் பஸ் நிலையம் அருகே வெறிபிடித்த நாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த நாய் திடீரென அவ்வழியாக சென்றவர்கள் துரத்தி கடிக்கத் தொடங்கியது. இதனால், பொதுமக்கள் அந்த நாயை விரட்டி அடித்தனர். அந்த நாய் தொடர்ந்து பாட்டிகுளம் போர்டின் பேட்டை, தோப்பு கோவில் ஈஸ்வரன் கோவில் தெரு கேட்க பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று நடந்து சென்ற பொதுமக்களை கடித்து குதறியது.

    இதில் படுகாயம் அடைந்த பொதுமக்கள்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். காயமடைந்த சேகர், முருகேசன், அண்ணாமலை, பாரதி, கணேசன், கண்ணன், கணபதி, போளிப்பாக்கம் முனுசாமி, கூடலூர் நரசிம்மன், அன்வர்திகன்பேட்டை ரங்கநாதன், வெங்குபட்டு வீரபத்திரன் ஆகிய 12 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அந்த வெறிநாய் மார்கெட் பகுதியில் மேலும் சிலரை கடித்துள்ளது. இதனால் பொதுமக்கள், அந்த வெறிநாயை அடித்து கொன்றனர். சுமார் ஒரு மணி நேரத்தில் நாற்பத்தி 47 பேரை  வெறிநாய்  கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தகவலறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெறிநாய் கடித்தவர்களுக்கு பழம் பிஸ்கட் வழங்கினார்.

    பின்னர், வெறிநாய் கடித்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது வட்டாட்சியர் வெற்றிகுமார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ், கிராம நிர்வாக உதவியாளர்கள் சிவா, ஐயப்பன் உடனிருந்தனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக  தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யவில்லை என்பதால் நாய்கள் பெருகி இருக்கலாம், இனிவரும் காலங்களில்  நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சிகிச்சை பெற்று வரும் சோளிங்கரை சேர்ந்த முருகனிடம் கேட்ட போது, வீட்டு வாசலில் இருந்தபோது அங்கே ஓடிவந்த வெறி நாய் தன்னை துரத்தி வந்து கடித்ததாக கூறினார். மேலும், அந்த நாய் அங்கிருந்த யாரையும்  கடிக்காதவாறு  அவர் அந்த நாயை துரத்தியதாக தெரிவித்தார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பேறுவோர்.


    இது குறித்து, கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ரங்கநாதனிடம் கேட்டபோது, கள்ளக்குறிச்சிக்கு சென்று வாக்கு பதிவு செய்துவிட்டு சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கிய போது ரங்கநாதனை வெறி நாய் கடித்ததாக தெரிவித்தார்.

    Must Read : வடிவேலு காமெடி பாணியில், பாரபட்சம் இல்லாமல் அனைத்து சின்னத்திலும் குத்து விட்ட வாக்காளர்!

    அக்கம் பக்கத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் வெறிநாயை அடித்து துரத்தி அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். என்றும், மருத்துவர்கள் தங்களுக்கு அக்கறையுடன் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    செய்தியாளர் - க.சிவா, ராணிப்பேட்டை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: