Home /News /tamil-nadu /

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை - ராணிப்பேட்டையில் சோகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை - ராணிப்பேட்டையில் சோகம்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

Ranipet | ராணிப்பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ராணிப்பேட்டையை அடுத்த காரை கிராம பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி குணசுந்தரி இவர்களுக்கு சொந்தமான வீட்டில் வாடகை பணத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்கள் 2 மகன்களுடன் வசித்து வந்த நிலையில் மூத்தமகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பன்னீர் செல்வத்தின் இரண்டாவது மகன் ரமேஷ். 30 வயதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ரமேஷ் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  மீண்டும் சிகிச்சைக்காக செல்ல இருந்த நிலையில் தாய் குணசுந்தரி  மகன் இருந்த அறையை திறந்து பார்த்தபோது ரமேஷ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Also Read: நகை வாங்குவது போல் நடித்து கொள்ளை.. நெல்லையில் டிப்டாப் வாலிபர்கள் கைவரிசை

இதை அறிந்த பன்னீர்செல்வம் மற்றும் குணசுந்தரி தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்து மனம் உடைந்த இருவரும் அதே அறையில் கணவன் மனைவி சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின்  முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

சம்பவம் அறிந்து ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ராணிப்பேட்டை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சடலங்களை அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென காவல்துறைக்கு அறிவுரை வழங்கி சென்றுள்ளார்.

செய்தியாளர்: சிவா (ராணிப்பேட்டை)
Published by:Elakiya J
First published:

அடுத்த செய்தி