• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டில் இருந்து 9,500 கன அடி தண்ணீர் வெளியேற்றம் : 26 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டில் இருந்து 9,500 கன அடி தண்ணீர் வெளியேற்றம் : 26 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாலாறு அணைக்கட்டு

பாலாறு அணைக்கட்டு

பொன்னை மற்றும் பாலாற்றில் இருந்து வரும் 9500கன அடி நீரானது பாலாறு அணைக்கட்டில் இருந்து அப்படியே வெளியேற்றப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தொடர் மழையால் பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டம்  வாலாஜாபேட்டை அணைக்கட்டு பகுதியில் இருந்து 9 ஆயிரத்து 500கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதனால், 26 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவ குண்டா நிரம்பிய நிரம்பி அதிலிருந்து 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்ட காரணத்தினாலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னை மற்றும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சுமார் 9 ஆயிரத்து 500 கன அடி நீரானது வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு வருகிறது
    இந்நிலையில் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணை அதன் முழு கொள்ளளவை எட்டியதாலும்  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் சுமார் 300 ஏரிகள் முழுமையாக நிரம்பிய காரனத்தினாலும் பொன்னை மற்றும் பாலாற்றில் இருந்து வரும் 9500கன அடி நீரானது அப்படியே வெளியேற்றப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்படி வெளியேறும் நீரானது காஞ்சிபுரம் செங்கல்பட்டு கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் வயலூர் வழியாக கடலில் கலக்கிறது. மேலும் பாலாறு மற்றும் பொன்னை ஆறு கரையோரம் வசிக்கும் 26 கிராமங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Must Read : Mettur Dam | மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க துணி துவைக்க அல்லது சாகசங்களில் ஈடுபடவும் முயற்சிக்கக் கூடாது  எனவும் தாழ்வான பகுதிக்கு செல்ல வேண்டாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    செய்தியாளர் - க.சிவா, ராணிப்பேட்டை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: