கொடூரத்தின் உச்சம்; சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் - சிக்கிய பெற்றோர்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய, மூன்று சிறுவர்களில் ஒருவரின் பெற்றோரே உடைந்தையாக இருந்துள்ளதுதான் அதைவிட அதிர்ச்சி.

கொடூரத்தின் உச்சம்; சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் - சிக்கிய பெற்றோர்
  • Share this:
14 வயது சிறுமி 3 சிறுவர்களால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம் ராணிப்பேட்டை அருகே நடந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் கூலி வேலை செய்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து அந்த பெண், தனது 14 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

அந்த சிறுமி அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக சிறுமி வயிற்று வலி என தன் தாயிடம் கூறி வந்துள்ளார். கடந்த மாதம் 30-ம் தேதி அதிக வயிற்றுவலியால் துடித்த அவர், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமியை சோதித்த மருத்துவர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சிறுமியின் தாயும் அதிர்ந்து போனார்.


வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. வேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியின் தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சிறுமியிடம் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாய் வேலைக்கு சென்ற நேரத்தில் குடியிருந்த பகுதியில் தன்னுடன் படிக்கும் சக மாணவி வீட்டிற்கு அடிக்கடி விளையாட சென்றுள்ளார். தோழியின் சகோதரரான 17 வயது சிறுவன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Also Read : எங்கள விட்டுறுங்க அண்ணா, ப்ளீஸ்.. கதறும் காதல் ஜோடி, அத்துமீறும் கும்பல் - அதிர்ச்சி வீடியோ17 வயதுடைய தனது நெருங்கிய நண்பர்கள் இருவரிடமும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து கூறியுள்ளார். அவர்கள் இருவரும் அந்த சிறுமியை மிரட்டி தனித்தனியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த ஓராண்டாக மூன்று சிறுவர்களும் அந்த சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர்.

அந்த மூன்று சிறுவர்களில் ஒருவரின் பெற்றோருக்கு இந்த விவகாரம் தெரிந்துள்ளது. சிறுமியிடன் மகன் அத்துமீறுவதை தடுக்காமலும், சிறுமிக்கு நடக்கும் கொடுமையை காவல்துறைக்கு தெரிவிக்காமலும் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து 17 வயது சிறுவர்கள் மூவர் மற்றும் அவர்களில் ஒருவரது பெற்றோரான வசந்தகுமார், சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவர்களை செங்கல்பட்டு சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கும், சுமதி மற்றும் வசந்தகுமாரை வேலூர் மத்திய சிறைக்கும் அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுமிக்கு பிறந்த குழந்தையை, அதிகாரிகள் மீட்டு திருப்பத்தூர் மாவட்ட அரசு தொட்டில் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்

 
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading