Home /News /tamil-nadu /

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு..!

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு..!

ரம்ஜான் பரிசு

ரம்ஜான் பரிசு

பள்ளி வாசலில் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் மளிகை பொருட்களும், 200 ரூபாய் நிவாரண தொகையும் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக அன்றாட வருமானம், வாழ்வாதாரம் இழந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாமல் இருந்த ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு நாகையில் ரமலான் பரிசு தொகுப்பு மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

நோன்பு இருந்துவரும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் இழந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாமல் இருந்த ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு நாகையில் ரமலான் பரிசு தொகுப்பு மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

நாகை அடுத்த தெத்தி பகுதியில் அமைந்துள்ள தக்குவா பள்ளி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சமரசம் நகர் பகுதியை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. பள்ளி வாசலில் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் மளிகை பொருட்களும், 200 ரூபாய் நிவாரண தொகையும் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை தக்குவா பள்ளி நிர்வாகிகள் ஜெஹபர் சாதிக் மற்றும் இமாம் அப்துல் கரீம் ஆகியோர் வழங்கினர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Gunavathy
First published:

அடுத்த செய்தி