உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ”சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: July 14, 2019, 2:25 PM IST
உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்
Web Desk | news18
Updated: July 14, 2019, 2:25 PM IST
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நீதித் துறையில் சிறப்பாக பணியாற்றிய நீதியரசர்கள் 3 பேருக்கு " சட்டவியல் முனைவர்" பட்டம் வழங்கி கவுரவித்தார்.

அதன்படி, கேரள ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சதாசிவம், உச்ச நீதிமன்ற நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, ஆகியோர் பட்டம் பெற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ”சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீதிக்காக தலைவணங்கிய எண்ணற்ற மன்னர்கள் ஆண்டது தமிழ்நாடு என பெருமிதம் தெரிவித்தார்.

Also Watch:   நிலவில் நீர்த்துளியை கண்டறிய விண்ணில் பாய ரெடியானது சந்திரயான்-2!

First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...