மூன்று நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுற்றுப்பயண திட்டம்

மூன்று நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுற்றுப்பயண திட்டம்

ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.

 • Share this:
  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணமாக இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார்.

  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவேற்றார். விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துவிட்டு காரில் சென்னை கவா்னா் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

  இதையடுத்து நாளை காலை கவா்னா் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூா் புறப்பட்டு அங்கிருக்கும் பொற்கோவிலுக்கு செல்கிறாா்.

  அதன்பின்பு தனியாா் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு விழாவில் கலந்து கொள்கிறாா். பின்பு மாலையில் வேலூரிலிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வந்து காரில் கவா்னா் மாளிகை செல்கிறாா்.

  11 ஆம் தேதி அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டுவிட்டு, அன்று பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறாா்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: