ரூ.97 லட்சமாக அதிகரித்த கந்துவட்டி கடன்: வீட்டுவந்து தரக்குறைவாக பேசிய கடன்கொடுத்தவர்கள்- தமிழாசிரியர் தூக்கிட்டு தற்கொலை

ரூ.97 லட்சமாக அதிகரித்த கந்துவட்டி கடன்: வீட்டுவந்து தரக்குறைவாக பேசிய கடன்கொடுத்தவர்கள்- தமிழாசிரியர் தூக்கிட்டு தற்கொலை

சித்தரிப்புப் படம்

ராமேஸ்வரத்தில் கந்து வட்டிக்கு கடன் வாங்கிய தமிழாசிரியரை கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கே வந்து தரக்குறைவாக பேசி மிரட்டியதால் அவமானமடைந்த அவர், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 • Share this:
  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே அக்காள் மடம் பகுதியை சேர்ந்தவர் 52 வயதான பூமாரியப்பன். இவர் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார்; மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவர் குழந்தைகளின் கல்விச் செலவுக்கும், நண்பர்களுக்கு உதவுவதற்காகவும் பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடன் வாங்கிய நண்பர்கள் அதைத் திருப்பித் தராததால், வாங்கிய கடனை அடைக்க கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார் பூமாரியப்பன். வட்டிக்கு வட்டி என அந்தத் தொகை அதிகரித்து 97 லட்சம் ரூபாய் அளவுக்கு பெருகியதாகக் கூறப்படுகிறது; அதனால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பூமாரியப்பன் தவித்துள்ளார்.

  Also read: ட்விட்டர் மூலம் பெண்களுடன் தொடர்பு கொண்டு கொலை...உடலை துண்டு துண்டாக வெட்டி சேமித்து வைத்த ஜப்பான் நபருக்கு தூக்கு தண்டனை

  செவ்வாய்க்கிழமை இரவு கடன் கொடுத்த சில நபர்கள் அவரது வீட்டிற்கே வந்து அவரை சந்தித்து தரக்குறைவாகப் பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலையில், வீட்டின் பின்பக்கம் தமிழாசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ராமேஸ்வரம் போலீசார் உடலை அகற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழாசிரியர் பூமாரியப்பன் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: