காஜல் அகர்வால் மீதான ஆசையில் 75 லட்சம் ரூபாயை இழந்த ராமநாதபுரம் இளைஞர்!

”சில நாட்களுக்குள் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தொழிலதிபர் மகன் வாழப் பிடிக்காமலும் அவமானம் தாங்காமலும் கொல்கத்தா சென்று தற்கொலைக்கு முயன்றார்”

news18
Updated: August 1, 2019, 9:56 AM IST
காஜல் அகர்வால் மீதான ஆசையில் 75 லட்சம் ரூபாயை இழந்த ராமநாதபுரம் இளைஞர்!
நடிகை காஜல் அகர்வால் | பாதிக்கப்பட்ட இளைஞர்
news18
Updated: August 1, 2019, 9:56 AM IST
நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன், சுமார் 75 லட்சம் ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனான 27 வயது இளைஞர், சில மாதங்களுக்கு முன்னர் கம்ப்யூட்டரில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, சில பெண்களின் புகைப்படங்களுடன் விளம்பரம் தோன்றியுள்ளது. விளம்பரத்தில், நடிகைகளின் கவர்ச்சி படங்கள் இருந்ததுடன், யாராவது விருப்பப்பட்டால் அந்த நடிகைகளை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கண்டதும் நடிகைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அந்த விளம்பரத்தை கிளிக் செய்து, உள்ளே சென்றுள்ளார். மேலும், தனது தகவல்களையும் அதில் பதிவு செய்துள்ளார். அடுத்த நிமிடமே சில நடிகைகளின் படங்கள் தோன்றி, அவர்களில் யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.


சினிமா நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க விரும்பிய அந்த வாலிபர், அந்த படத்தின் மீது ‘கிளிக்’ செய்துள்ளார். இதனை உறுதி செய்ய ரூ.50 ஆயிரம் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வந்துள்ளது.

நடிகையை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் 50 ஆயிரம் ரூபாயை அதில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். இளைஞரின் பொருளாதார பின்னணியை மோப்பம் பிடித்த சமூக வலை தள பணம் பறிப்பு கும்பல் தொழிலதிபரின் மகனை தங்கள் வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

காஜல் அகர்வால் படப்பிடிப்பில் உள்ளார் இன்னும் ஓரிரு நாளில் உங்களை தொடர்பு கொள்வார் என ஆசையை தூண்டினர். மோகத்தின் உச்சம் சென்ற இளைஞரிடம் இருந்து சிறுகச் சிறுக ரூ.75 லட்சத்தை சிவகங்கை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது வங்கி கணக்கு மூலம் பெற்றுக் கொண்டனர். சில நாட்களுக்குள் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தொழிலதிபர் மகன் வாழப் பிடிக்காமலும் அவமானம் தாங்காமலும் கொல்கத்தா சென்று தற்கொலைக்கு முயன்றார்.

Loading...

இதனை அடுத்து தொழிலதிபர் அளித்த புகாரின்படி ராமநாதபுரம் தனிப்படை கொல்கத்தா சென்று தொழிலதிபரின் மகனை மீட்டனர். பின்னர் சிவகங்கை மணிகண்டனை பிடித்து விசாரித்த போது சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சரவணக்குமார் பட தயாரிப்பிற்காக சில நபர்கள் பணம் தருவார்கள் என்று சொல்லி எனது கணக்கில் பணத்தை பெற்று சென்றார் என கூறியுள்ளார்.

அதன் பேரில் சென்னையில் சரவணக்குமாரை கைது செய்து விசாரணை செய்ததில் நடிகை மோகம் காட்டி ராமநாதபுரம் தொழிவதிபர் மகனிடம் பெற்ற ரூ.75 லட்சத்தில் ரூ.68 லட்சத்தை உலக கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்தது தெரிய வந்தது. எஞ்சிய தொகை சரவணக்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்துள்ளது. இதனை அடுத்து சரவணக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மேலும் இது தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர்.

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...