ஸ்டாலின் முதல்வரானதால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றிய பெண்..

ஸ்டாலின் முதல்வரானதால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றிய பெண்..

வனிதா

திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக நேர்த்திக்கடன் வேண்டிய பெண் ஒருவர் அதனை நிறைவேற்றி உள்ளார்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கியது. தற்போது வரை வெற்றி மற்றும் முன்னிலையுடன் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

  இதையடுத்து திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும் 7-ம் தேதி பதவியேற்க உள்ளார். கொரோனா தொற்று காரணமாக பதிவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். முதன்முறையாக ஸ்டாலின் முதல்வர் பதவியேற்க உள்ளதாதல் அவர்கள் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

  இந்நிலையில் ஸ்டாலின் முதல்வராக உள்ளதால் பெண் ஒருவர் நாக்கினை அறுத்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32). இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

  அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார்.  கோவில் திறக்காததால் நாக்கினை வாசல் படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின் பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: