மத்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று குவைத் வழியாக சென்னை திரும்பிய ராமநாதபுரத்தை சோ்ந்தவரை சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனா்.
குவைத்தில் இருந்து குவைத் ஏா்லைன்ஸ் விமானம் அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த முனிய செல்வம் (வயது-37) என்பவரின் பாஸ்போா்ட்டை அதிகாரிகள் சோதனையிட்டனா். அவா் கடந்த 2021 ஆண்டில் டிரைவா் வேலைக்காக சவுதி அரேபியா சென்றவா், அங்கிருந்து இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று, அங்கு சில மாதங்கள் தங்கியிருந்தது தெரியவந்தது.
Also read:
கொரோனா பாதிப்பால் ஆண் உறுப்பின் அளவு சிறிதானது; விறைப்பு குறைபாடு - இளைஞர் பகீர் தகவல்
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் முனிய செல்வத்தை வெளியில் அனுப்பாமல் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினா். அப்போது அவா், தனக்கு ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்பது தெரியாது. மேலும் சவுதி அரேபியா நாட்டில்,நான் வேலை செய்த நிறுவனம் கூறியதால் ஏமன் சென்றேன் என்று கூறினாா். ஆனால் அவருடைய விளக்கத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை.
lso read:
ஓமைக்ரான் பரவலால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை
இதையடுத்து இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று வந்த குற்றத்திற்காக சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் முனிய செல்வத்தை கைது செய்தனா். அதோடு மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனா். விமானநிலைய போலீசாா் முனிய செல்வம் மீது தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று வந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.