ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தேர்தல்களில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 68.67% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Web Desk | news18
Updated: March 15, 2019, 5:19 PM IST
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
ராமநாதபுரம்
Web Desk | news18
Updated: March 15, 2019, 5:19 PM IST
மீனவ மக்கள் அதிகம் வாழும் ராமேஸ்வரம் பகுதியை கொண்ட ராமநாதபுரம் ஆரம்பத்தில் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாக இருந்தது. பின்னர், சிவகங்கை மற்றும் விருதுநகர் எனப் பிரிக்கப்பட்டு தனித்தனி மாவட்டங்களாக மாற்றப்பட்டன.

1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 6 முறை வெற்றி பெற்றது. அ.தி.மு.க 4 முறையும் தி.மு.க 3 முறையும் இத்தொகுதியில் தங்களது வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் அன்வர் ராஜா 4,05,945 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் அப்துல் ஜலீல் 2,86,621 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.


பா.ஜ.க வேட்பாளர் குப்பு ராமு 1,71,082 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் 62,160 வாக்குகளையும் பெற்று தோல்வியைச் சந்தித்தனர். 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 68.67% வாக்குகள் பதிவாகியுள்ளன.

வரும் மக்களவைத் தேர்தலில் இளம் வாக்காளர்களின் பங்களிப்பின் காரணமாக இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...