ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் குமரன் சேதுபதி உயிரிழப்பு

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் குமரன் சேதுபதி உயிரிழப்பு

குமரன் சேதுபதி மறைந்தார்

குமரன் சேதுபதி மறைந்தார்

Kumaran Sethupathi : ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலய தக்காருமான குமரன் சேதுபதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலய தக்காருமான குமரன் சேதுபதி உயிரிழந்துள்ளார். பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

  ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தின் குழு தலைவருமான குமரன் சேதுபதி இன்று திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 56. இவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.

  இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை இராமலிங்க விலாசம் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள, குமரன் சேதுபதியின் உடலுக்கு பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  Must Reaed : குரங்கம்மை தொற்றுநோய் அல்ல.. பதற்றப்பட வேண்டாம்: அமைச்சர் ம.சுப்பிரமணியன்

  குமரன் சேதுபதி உயிரிழந்தார்

  அதன்படி, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோல ஏராளமானோர் குமரன் சேதுபதியில் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  செய்தியாளர் - பொ. வீரக்குமரன், ராமநாதபுரம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Death, Ramanathapuram