• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண்களுக்கு அனுமதியில்லை: 101 ஆடுகளை வெட்டி வழிபாடு!

பெண்களுக்கு அனுமதியில்லை: 101 ஆடுகளை வெட்டி வழிபாடு!

வழிபாடு

வழிபாடு

பெண்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்று அங்கு மண் பீடத்தில் எல்லை பிடாரி அம்மன் உருவத்தை வடிவமைத்து நள்ளிரவில் 101 கிடாய்களை பலியிட்டு கூட்டு வழிபாடு நடத்துவார்கள்.

  • Share this:
    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மழை பெய்ய வேண்டி நள்ளிரவில் பெண்கள் நடமாட்டமில்லாத காட்டு பகுதயில் 101 ஆடுகளை பலியிட்டு வினோத வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    ராமநாதபுரம், கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில் எல்லை பிடாரி அம்மன் கன்னிபெண் குலதெய்வ வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று ஒன்று கூடி அதற்கான திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    கடந்த மூன்று தலைமுறை காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் இத்திருவிழா நேற்று நள்ளிரவில் துவங்கியது.

    மானாவாரி பயிர்களான விவசாய பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டும் முறையான பருவமழை பெய்து அதிக மகசூல் கிடைத்திடவும் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்திட வேண்டி  இந்த திருவிழா நடைபெற்று வருகிறது.  இந்த திருவிழாவில் பெண்களுக்கு அனுமதியில்லை.



    பெண்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்று அங்கு மண் பீடத்தில் எல்லை பிடாரி அம்மன் உருவத்தை வடிவமைத்து நள்ளிரவில் 101 கிடாய்களை பலியிட்டு கூட்டு வழிபாடு பூஜைகள் செய்து அதிகாலையில்  பச்சரிசி சோறு சமைத்து அம்மனுக்கு படையலிட்டு பூஜையில் பங்கேற்ற ஆண்கள் அனைவருக்கும் அசைவ கறி விருந்து பிரசாதமாக பரிமாறபட்டது. இதில் ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்

    செய்தியாளர்: சர்க்கரை முனியாண்டி

    இதையும் படிங்க: ஃபிலிம் வாங்க நிதிப் பற்றாக்குறை- பேப்பரில் எக்ஸ்ரே முடிவுகள்: அரசு மருத்துவமனையின் அவலம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: