ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கல் உப்புக்கு கடும் கிராக்கி - விலையும் கிடுகிடு உயர்வு

கல் உப்புக்கு கடும் கிராக்கி - விலையும் கிடுகிடு உயர்வு

வடகிழக்கு பருவமழை காரணமாக இராமநாதபுரத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், கல் உப்பிற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், விலையும் உயர்ந்துள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

வடகிழக்கு பருவமழை காரணமாக இராமநாதபுரத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், கல் உப்பிற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், விலையும் உயர்ந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பனைக்குளம், நதிப்பாலம், உப்பூர், திருப்பாலக்குடி, சாயல்குடி வாலிநோக்கம், திருப்புல்லாணி உள்ளிட்ட ஊர்களில் பல ஏக்கர் பரப்பளவில் உப்பளபாத்திகள் உள்ளன. இங்கு பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும்.

தற்போது, வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ள நிலையில், ராமநாதபுரத்தில் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஐந்து நாட்களாக மழை சற்று ஓய்ந்து உள்ளதால், பனைக்குளம் அருகே உள்ள நதிப்பாலம் உப்பளங்களில் இருந்து ஏற்கனவே பிரித்தெடுக்கபட்டு மலைபோல் குவித்து வைத்திருந்த கல்உப்பை சாக்கு பைகளில் போட்டு, பேக்கிங் செய்து லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மழை சீசன் தொடங்கியதால் உப்பளங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மழை சீசன் முடிந்தபின், அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் மீண்டும் உப்பு உற்பத்தி செய்யும் பணி தொடங்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே, உற்பத்தி செய்யப்பட்ட உப்புகள் பேக்கிங் செய்யப்பட்டு, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை ஒரு டன் ரூ.2,500 க்கு விற்று வந்த உப்பு, ரூ.500 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அதற்கும், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. போக போக மழையால் விலை உயர வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

செய்தியாளர்: மனோஜ்குமார் - இராமேஸ்வரம்

First published: