நள்ளிரவில் கண்விழித்த பெண்.. பீரோ அருகில் நின்ற உருவம் - ஷாக்கான பெண்

மாதிரிப்படம்

வீட்டில் பீரோ அருகே ஏதோ ஒரு உருவம் இருப்பதைக்கண்டு லட்சுமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

 • Share this:
  பரமக்குடியில் நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த பெண் கண்விழித்து பார்த்தபோது அருகில் ஒரு உருவம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

  பரமக்குடி பட்டாபி சீதா ராமன் தெருவில் நாகர்கோவில் முகிலன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுடலை. இவர் பரமக்குடி பகுதியில் பல வீடுகளில் இரவு நேரங்களில் திருடிவிட்டு விட்டு பட்டாபி சீதாராமன் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். வீட்டின் பீரோவின் சாவியை தேடி கொண்டிருந்த போது  வீட்டிலிருந்த பெண் லட்சுமி திடீரென்று எழுந்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் எதோ ஒரு உருவம் இருப்பது போல் தெரிந்துள்ளது. உடனே லைட்டை ஆன் செய்து யார் என்று பார்க்க முயன்றுள்ளார்.   திருடன் சுடலை  உடனடியாக அங்கிருந்து லட்சுமியை தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

  Also Read:  அந்த மனசுதான் சார் கடவுள்.. ஆப்கான் குழந்தைகளை அரவணைக்கும் அமெரிக்க வீரர்கள்

  உடனே லட்சுமி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒருவன் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து துரத்த ஆரம்பித்துவிட்டனர்.அதற்குள் திருடன் நீண்டதூரம் ஓடிவிட்டு காமராஜர் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஏறி ஓட முடியாமல் மாட்டிக் கொண்டார்.

  திருடனைப் பிடிக்க துரத்தி வந்த பொதுமக்கள் சுடலையை கையும் களவுமாக பிடித்து  இழுத்து வந்தனர்.அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க சுடலை ஓட ஆரம்பித்தார் மீண்டும் மடக்கிப்பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து  மின் கம்பத்தில் கட்டி வைத்து பின்னர் பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

  Also Read: இன்ஸ்டாகிராம் பழக்கம்.. சிறுமியை கடத்திச் சென்ற லாரி க்ளீனர் - போக்சோ சட்டத்தில் கைது

  சுடலை


  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தபோது இரவு நேரங்களில் பல வீடுகளில் திருடுவதே இவரது தொழில் என்று ஒப்புக்கொண்டார். நேற்று ஒருநாள் இரவு மட்டும் 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 3 சவரன் தங்க நகைகளை திருடி பாக்கெட்டில் மறைத்து வைத்த்திருந்தார்.அதனை பொதுமக்கள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து காயமடைந்த சுடலையை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்து விசாரணை செய்து வருகின்றனர்.

  செய்தியாளர்:  கு.தமிழ்ச்செல்வன் (பரமக்குடி)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: