ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி; கழுத்தறுத்து கொலை செய்த கணவன்!!

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி; கழுத்தறுத்து கொலை செய்த கணவன்!!

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

குழந்தைக்கு முத்தம் கொடுப்பது போல மனைவி பவித்ராவை இளநீரை வெட்டுவதற்கு வைத்திருந்த அரிவாளை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தில்லை தப்பி ஓடியுள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ராமநாதபுரத்தில் 25 வயது இளம்பெண் கணவரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மல்லிகை நகர் பகுதியில் வசித்து வருபவர் பவித்ரா (25). இவரது கணவர் தில்லை குமார்  இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஐந்து வயதுடைய பெண் குழந்தை உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு மனைவி பவித்ராவை காணவில்லை என தில்லை குமார் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சில நாட்களுக்கு பின்பு அவரது மனைவி அதே பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் தீபன் என்னும் வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்து வெளியில் சென்றதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வாக்குவாதம் நிலவி வந்த சூழலில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருவீட்டார் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கணவன் தில்லையுடன் பவித்ராவை ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனினும், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை, சச்சரவு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை பவித்ரா தனது அம்மா வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது குழந்தைக்கு முத்தம் கொடுப்பது போல  மனைவி பவித்ராவை இளநீரை வெட்டுவதற்கு வைத்திருந்த அரிவாளை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தில்லை தப்பி ஓடியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் நகர் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also read: நிதி நிறுவன நெருக்கடியால் தஞ்சாவூரில் தொடரும் தற்கொலைகள்!

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மாயமான தில்லை குமாரனை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.  இந்நிலையில் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கொலை விவகாரம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் - பொ.வீரக்குமரன்

First published:

Tags: Ramanathapuram, Rameshwaram