முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதியை சொல்லி பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முதுகுளத்தூர் பகுதியில் அவருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பிடிஓ ராஜேந்திரன் என்பவர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும் ஜாதி பெயர் சொல்லி அவதூறாகப் பேசியும் மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தர்மர் என்பவர் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும் இழிவாக பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
இன்னும் ஒரு வாரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அமைச்சர் வட்டார வளர்ச்சி அலுவலரை மிரட்டியும் ஜாதிய வன்மத்தை அவர்கள் மீது காட்டியும் அமைச்சர் என்ற ஆணவத்தில் அவர்களை மிரட்டி உள்ளார். ஆகவே அவர் மீது திமுக அரசு தக்க நடவடிக்கை எடுத்து அவரை பதவியை விட்டு நீக்கம் செய்ய வேண்டும் எனவும், இல்லையேல் மாநில இளைஞர் தேவேந்திரகுல வேளாளர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : பாரத் நெட் திட்டம் மூலம் கிராம ஊராட்சிகளில் ஓராண்டுக்குள் இணைய வசதி: அமைச்சர் மனோ தங்கராஜ்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். கடந்த 27ஆம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை சிவகங்கையில் உள்ள அவரது வீட்டிற்கு வரச்சொல்லி, சாதிரீதியாக இழிவாக ஒறுமையில் பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.