காய்கறி விற்பனை அனுமதிக்காக 4 மணி நேரம் காத்திருந்த வியாபாரிகள்: இன்றைய நாள் வீணாகியதாக வேதனை!

வியாபாரிகள் காத்திருப்பு

காய்கறி விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற இன்று காலை 6 மணி முதல் பரமக்குடி தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கூடியிருந்தனர். அதிகாரிகள் வர நீண்ட  நேரம் ஆனதால்  வியாபாரிகள் வெயிலில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.   காலை 10 மணியை கடந்தும் அதிகாரிகள் வரவில்லை என கூறப்படுகிறது

 • Share this:
  பரமக்குடியில்  காய்கறி விற்பனை வண்டிக்கு அனுமதி பெறுவதற்காக வியாபாரிகள்  நான்கு  மணி நேரமாக வெயிலில்  காத்திருந்தனர்.

  தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத  முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், காய்கறி கடைகள் போன்றவையும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைக்காக நடமாடும் வண்டிகள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படும் என  தமிழக அரசு அறிவித்தது.

  தோட்டக்கலைத்துறை மூலம் அதற்கு அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள வியாபாரிகள் , காய்கறி விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற இன்று காலை 6 மணி முதல் பரமக்குடி தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கூடியிருந்தனர். அதிகாரிகள் வர நீண்ட  நேரம் ஆனதால்  வியாபாரிகள் வெயிலில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.   காலை 10 மணியை கடந்தும் அதிகாரிகள் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.

  இதுகுறித்து வியாபாரிகள்  கூறுகையில், காலை முதல் காய்கறி விற்பனை செய்ய வண்டி அனுமதிக்காக காத்திருக்கிறோம். ஆனால் அதிகாரிகள் இன்னும் வரவில்லை. 12 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளனர். ஆனால் தற்போதே மணி பத்தை கடந்து விட்டது. இனிமேல் வியாபாரம் செய்ய முடியாது.இன்று ஒருநாள் வீணாய் போய்விட்டது.தாமதிக்காமல் விரைந்து காய்கறிகள் விற்பனை செய்யும் வண்டிக்கு அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என  கோரிக்கை விடுத்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Murugesh M
  First published: