Home /News /tamil-nadu /

ராமேஸ்வரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்.. வசூல் வேட்டையில் விடுதிகள்

ராமேஸ்வரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்.. வசூல் வேட்டையில் விடுதிகள்

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

. தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரத்தில் வெளியூர் வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குவிந்தனர்.

    தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் பக்தர்கள் கூட்ட நெரிசலால் நோய் தொற்று பரவும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு  டிசம்பர் 27-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரத்தில் வெளியூர் வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் பார்த்து செல்கின்றனர். கூட்ட நெரிசலை சரி செய்யாமல் அலட்சியம் காட்டும் கோவில் நிர்வாக பணியாளர்களால் அதிக கூட்ட நெரிசலால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    Also Read:  நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன்பதிவு விவசாயிகள் கண்டனம்

    நீண்ட மாதங்களுக்கு பின் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா பயணிகள் பக்தர்கள் வருகையால் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் காவல்துறை திணறி வருகின்றனர். மேலும் வெளியூர் வெளிமாநில விடுதிகள் சுற்றுலா பயணிகளிடம் பக்தர்களிடம் தனியார் விடுதிகள் ஒரு அறைக்கு சாதாரண நாளில் 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் கூட தற்போது 3,000 ரூபாய் கட்டணம் முதல் 5,000 வரை வசூலிக்கின்றனர்.

    விடுதிகள் அதிக கட்டண வசூல் வேட்டையில் தொடங்கியுள்ளனர். இதை அதிகாரிகள் கவனம் செலுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    செய்தியாளர்: சேது குமரன் 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Hindu Temple, Rameshwaram, Tour, Tourist spots

    அடுத்த செய்தி