வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

போக்குவரத்து துறையில் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பபடும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள திணைக்குளம் கிராமத்தில் 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார். பரமக்குடியில் இருந்து கோயமுத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், பொட்டகவயல், ஆனந்தூர், தொண்டி, சாயல்குடி, ஆக்கன் வயல் போன்ற 12 புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவையை  துவங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    தொடர்ந்து, 1.66 கோடி மதிப்பீட்டில் சத்தியமூர்த்தி காலனி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன அலுவலக கட்டிடத்தை  திறந்து வைத்து பயனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது. தமிழகத்தின் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் தற்போது இயக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து தமிழகத்தில் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படும்.

    Also read: அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை கண்டுபிடிப்பதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது: வானதி சீனிவாசன்

    அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 2000 பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும். தற்போது 16,650 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து இன்னும் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார்.

    ஜனங்களுக்காக எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. ஜனங்கள் மீது சுமையை செலுத்த மாட்டோம். முன்னாள் அமைச்சர்கள் பற்றி கேட்கும்பொழுது மடியில் கனமில்லை. பயப்படத் தேவையில்லை உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் தப்பு செய்தால் தண்டனை பெற வேண்டும். தவறு யார் செய்தாலும் தண்டனை நிச்சயம்.

    கடன் வாங்காமல் அரசை நடத்த முடியாத அளவு சரியான முறையில் வட்டி கட்டி அதிக அளவில் கடன் பெறாமல் இருந்தால் சுமுகமாக செல்லும் எனவும் கூறினார். இரண்டே முக்கால் லட்சம் கோடி கடனை 5 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளதால் கஷ்டம் வந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    போக்குவரத்து துறையில் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தயாராகிக்கொண்டிருக்கிறது. எஸ்.சி.டி.சி யில் ஆயிரத்து 800 காலிப்பணியிடங்கள் உள்ளது. நடத்துநர், ஓட்டுநர் பற்றாக்குறை உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதல்வரிடம் பரிசீலித்து வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும்.

    போக்குவரத்து துறை நஷ்டத்தில் தான் இயங்குகிறது மக்கள் பணியில் போக்குவரத்துறை தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. மின்சாரத் துறையும் போக்குவரத்து துறையும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கினாலும் மக்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருப்பதால் முதலமைச்சர் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.

    பெண்களுக்கு தேர்தலில் இலவசம் 40 சதவீதமாக எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது 60% ஆக உயர்ந்துள்ளதாகவும்
    போக்குவரத்து துறையில் தவறு நடந்தால் உடனடியாக தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்

    செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன்
    Published by:Esakki Raja
    First published: